கைத்தோழில் அபிவிருத்திச் சபைக்கு வரவேற்கிறோம்

பிராண்டிங் மற்றும் மார்க்கெட்டிங் குறித்த இரண்டு நாள் பயிற்சி பட்டறை

இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும் SLIM நிறுவனம் (Sri Lanka Marketing Institute) இணைந்து 10.10.2024 மற்றும் 11.10.2024 ஆகிய தேதிகளில் கைத்தொழில் அபிவிருத்திச் சபை லக்கம் கேட்போர் கூடத்தில் தொழில் அபிவிருத்தி அதிகாரிகளின் வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்தல் பற்றிய அறிவை மேம்படுத்துவதற்காக இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையை ஏற்பாடு செய்திருந்தது. இலங்கையில் தொழில் வர்த்தக நாமங்களை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக சபையின் தலைவர் திரு.ரவி நிஸ்ஸங்க தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் SLIM நிறுவனத்தின் கௌரவச் செயலாளர் திரு.இனோ பெரேரா, கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பணிப்பாளர் நாயகம் பாலித டிக்வெல்ல, தொழில்முனைவோர் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் ரேணுகா ஜயலத், உதவிப் பணிப்பாளர் கலாநிதி சமிந்த ரணதுங்ககே ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த இரண்டு நாள் பயிற்சி நிகழ்ச்சியின் வள பங்களிப்பை SLIM நிறுவனம் வழங்கியதுடன், அதன் சார்பாக வர்த்தக சிண்டிகேட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி ரொய்ஸ்டன் கமின் மற்றும் ஜேனட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் திரு. அசங்க உதய குமார ஆகியோர் விரிவுரைகளை வழங்கினர். மாவட்ட அலுவலகங்கள் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதான அலுவலகங்களில் பணிபுரியும் சுமார் 60 அதிகாரிகள் கொண்ட குழுவிற்கு இதன் கீழ் பயிற்சியளிக்கப்பட்டது.

இடம்: ஆடிட்டோரியம், IDB