கைத்தோழில் அபிவிருத்திச் சபைக்கு வரவேற்கிறோம்

கண்ணோட்டம்

எம்மைப்பற்றி

கண்ணோட்டம்

கைத்தொழில் அபிவிருத்தி சபை (கை.அ.ச) கைத்தொழில் அமைச்சு கீழ் இயங்கும் ஒரு நியதிச்சட்ட நிறுவனமாகும். 1969 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க கைத்தொழில் அபிவிருத்தி சட்டத்தின் மூலம் இதற்கு சட்டரீதியிலான தத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு அமைவாக இலங்கையின் கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்வதற்கான பொறுப்பு சாட்டப்பட்டுள்ள முதன்மையான அரச நிறுவனம் கைத்தொழில் அபிவிருத்தி சபையாகும்.

நோக்கு

பணி

மூலோபாய கவனக்குவிப்பு

இலங்கை முழுவதிலும் அனைத்து கைத்தொழில்களையும் அபிவிருத்தி செய்தல்

இலங்கை முழுவதும் உள்ள அனைத்து கைத்தொழில்களை ஊக்குவிப்பதற்கு மற்றும் அபிவிருத்தி சைவதற்கும் தேவையான தொழில்நுட்ப மூலோபாயங்கள் மற்றும் வர்த்தக அடித்தளத்தை வழங்கும்
Drive locally & globally sustainable industrial growth, while achieving financial autonomy for IDB

IDB இன் தவிசாளர்

சபையின் உறுப்பினர்கள்
தவிசாளர் - இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை

+94 112 607 175, +94 112 605 887

chairman@idb.gov.lk

தொலை நோக்குப் பார்வைக் கொண்ட தலைவரான வத்தியர் சாரங்க அலகப்பெரும இலங்கையின் கைத்தொழில் அபிவிரித்திச்சபையின் ( IDB) தலைவராகவும் ஸ்ரீ ஜெயவர்தன்புர் வைத்தியசாலையின் தலைவராகவும் பணியாற்றுகின்றார். அவர் Colombo Leadership Excellence 2024 இல் திறம்சியுள்ள தலைவராக ( CEO) விருதுடன் அங்கீகரிக்கப்பட்டார்.

 உள்ளூர் உற்பத்தி மூலம் இலங்கையை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கும் தொழில் முனைவோர்களின் கலாசாரத்தை வளர்க்கவும் "GetupStartup"போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

 அன்மையில் ஸ்ரீ ஜெயவர்தின்புர வைத்தியசாலையின் தலைவராக வேலை செய்கின்ற வைத்தியர் அலகப்பெரும நோயாளிகளுக்கான செலவு குறைந்த சுகாதாரமும் கூட்டு நடைமுறைகள் மூலம் சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு சேவையாற்றுகின்றார். அவர் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராகவும் மத்திய சுற்றுசூழல் அதிகாரசபையின் பிரதான பணிப்பாளராகவும் மற்றும் தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் ( NAITA) தலைவர் மற்றும் துணைத் தலைவராகவும் வேலை செய்துள்ளார். வைத்தியர் சாரங்க அலகப்பெரும அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தால் MBBS பட்டத்தையும் அமெரிகாவின் நார்தம்ப்டன் பல்கலைக்கழகத்தால் MBA பட்டத்ரையும், அமெரிகாவின் பாக்கிங்ஹம்ஷயர் புதிய பல்கலைக்கழகத்தினால் LLB பட்டத்தையும் பெற்றுள்ளார்.

 இலங்கை இதழியல் நிறுவனத்தினாலும், இலங்கைத் தொழிற்காட்சி பயிற்சி நிறுவத்தினாலும் இதழியல் துறையில் டிப்லோமா பெற்றுள்ளார். வைத்தியர் சாரங்க அலகப்பெரும " Beyond Sri Lanka 2020" என்ற நூலை எழிதியுள்ளார். காலி மஹிந்த வித்தியாலயத்தின் சிறந்த பழைய மாணவரான வைத்தியர் அலகப்பெரும அவர்கள் பணியாற்றிய நிறுவனங்களுக்கும் சமூகத்திற்கும் சிறந்த சேவை செய்கின்ற ஒரு திறமையுள்ள தலைவர் என்று கூறுவது தக்கது.

நிறுவனக் கட்டமைப்பு

  • அமைச்சரினால் நியமிக்கப்படுகின்ற தலைவர் மற்றும் ஒன்பது பேரைக் கொண்ட பணிப்பாளர் சபையினால் கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு தலைமைத்துவம் வழங்கப்படுகின்றது.
  • தலைவருக்கு பணிப்பாளர் நாயகம் உதவி வழங்குவதுடன் அவரின் கீழ் இயங்கும் ஒன்பது பேரைக் கொண்ட பணிப்பாளர்களின் தலைமையின் கீழ் தொழிற்பாட்டுப் பிரிவுகள் இயங்குகின்றன. தொழிற்பாட்டுப் பிரிவுகள் கைத்தொழிலுக்கு வழங்கப்படுகின்ற சேவைகளுக்கு பொறுப்புக்கூறுபவைகளாக இயங்குகின்றன.
  • பிரதேச மட்டத்தில் நிகழ்ச்சித்திடடங்களை நடைமுறைப்படுத்துதல் பிரதேச அபிவிருத்திப் பிரிவின் விடயப்பொறுப்பின் கீழ் வருவதுடன் முழு நாட்டையும் தழுவும் வகையில் காணப்படும் தனது மாவட்ட அலுவலகங்களைக் கொண்ட வலைப்பின்னல் ஊடாக இப்பணி மேற்கொள்ளப்படுகின்றது.
  • தலைமை அலுவலகத்திற்கு வருகை தரும் சேவைப் பெறுனர்களுக்கு அடிப்படை ஆலோசனகளை வழங்குதல் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்பாட்டு பிரிவுகளிடமிருந்து அல்லது நாடளாவிய ரீதியில் வியாபித்திருந்கும் மாகாண வலைப்பின்னலில் இருந்து மேலும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு வழிசமைப்பதற்காக கைத்தொழில் அபிவிருத்தி சபையுடன் தொடர்புகொள்வதற்கு வசதியளிக்கும் பொருட்டு இணையத்தளத்தின் வாயிலாக அவர்களை பதிவுசெய்யும் விடயம் தகவல் பீடத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.