கைத்தோழில் அபிவிருத்திச் சபைக்கு வரவேற்கிறோம்

"ஒரு ஏற்றுமதி வியாபாரத்தை ஆரம்பியுங்கள், முழுப் பொருளாதாரத்தையும் வெல்லுங்கள்"
ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்ட தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையானது உற்பத்திகளின் உலகளாவிய சந்தைப் பிரவேசத்தை இலகுபடுத்துவதற்காக “அரம்பமு ஜயகமு” திட்டத்தை ஆரம்பித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஊக்குவிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் 2024 பெப்ரவரி 7 புதன் கிழமை அன்று காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை கம்பஹா மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற உள்ளது. வணிக வளர்ச்சி மற்றும் ஏற்றுமதியை ஆதரிக்கும் அனைத்து அரசு, அரசு சாரா நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், மற்றும் வணிக சேவை நிறுவனங்கள் கூட்டாக இணைந்து அன்றைய தினம் தகவல் மற்றும் சேவைகளை வழங்கவிருக்கின்றன.
பங்கேற்பாளர்கள் ஒரு வணிகத்தைத் ஆரம்பிப்பதற்கான அறிவைப் பெறவும், வணிகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான தகவல்களைப் பெறவும், ஏற்கனவே இயங்கும் வணிகங்களை மேம்படுத்துவதற்கான ஆதரவைப் பெறவும், ஏற்றுமதி முயற்சிகளைத் தொடங்கவும் அல்லது மேம்படுத்தவும், வணிக நடவடிக்கைகளில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகள் மற்றும் தொடர்புடைய சேவைகளைக் கண்டறியவும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்வர். இந்த திட்டத்தில் ஏற்றுமதி கொள்வனவாளர்களை சந்திப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது மேலும் இந்நிகழ்வின் போது ஏற்றுமதி செய்ய எதிர்ப்பார்க்கும் பொருட்களின் மாதிரிகளை கொண்டு வருமாறு கைத்தொழிலாளர்களை கேட்டுக்கொள்கிறோம். மேலும் இதன் போது ஏற்றுமதி செயல்முறை, சான்றளிப்பு மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் குறித்தும் விரிவுரைத் தொடர் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு 0332222909 என்ற தொலைபேசி எண்ணில் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மாவட்ட அலுவலகங்களைத் தொடர்புகொள்ளவும்

Venue: Divisional Secretariat - Gampaha