கைத்தோழில் அபிவிருத்திச் சபைக்கு வரவேற்கிறோம்

பாடசாலை கைத்தொழில் தொழில் முனைவோர் கழக தேசிய வேலைத்திட்டம் – புதிய அணுகுமுறையுடன் முன்னோக்கி

கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் (IDB) மாவட்ட பிரதிப் பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களை அறிவூட்டும் விசேட நிகழ்வொன்று 2026 ஆகஸ்ட் 21ஆம் திகதி லக்காம் கேட்போர் கூடத்தில், பாடசாலை கைத்தொழில் தொழில் முனைவோர் கழக தேசிய வேலைத்திட்டத்தை புதிய அணுகுமுறையுடன் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வு கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு. யசஸ் ஹேவகே மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை கைத்தொழில் மாற்றங்களை நோக்கி முன்னேறி வரும் நிலையில், அதற்கேற்ப பாடசாலை கைத்தொழில் தொழில் முனைவோர் கழக வேலைத்திட்டத்திலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. சிறுவயதிலிருந்தே மாணவர்களிடையே புத்தாக்க சிந்தனை, தொழில் முனைவோர் மனப்பாங்கு மற்றும் கைத்தொழில் திறன்களை வளர்ப்பதே இவ்வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

2026ஆம் ஆண்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் புதிய திசை, முக்கிய நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைப்படுத்தும் திட்டம் தொடர்பில் தலைவர் திரு. யசஸ் ஹேவகே அவர்கள் மாவட்ட பிரதிப் பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் சபையின் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்தார்.

மேலும், இவ்வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு உத்தியோகத்தர்களின் செயற்பாட்டுமிக்க பங்களிப்பின் முக்கியத்துவத்தையும், திட்டமிடப்பட்ட செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைவாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் அவசியத்தையும் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.

வேலைத்திட்டத்தின் எதிர்கால நடைமுறைப்படுத்தல் தொடர்பான விளக்கங்களை தொழில் முனைவோர் அபிவிருத்திப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திரு. ஜயந்த பிரேமகுமார அவர்கள் வழங்கினார்.

Venue: IDB