கைத்தோழில் அபிவிருத்திச் சபைக்கு வரவேற்கிறோம்

IDB இன் "Beyond Development Towards Transformation" தொலைநோக்கை நனவாக்கும் பயணம்

இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் (IDB) தலைவர் திரு. யசஸ் ஹேவகே, சபையின் பிரிவு தலைவர்களுடன் இணைந்து IDB வளாகத்தில் ஆய்வுப் பார்வையில் ஈடுபட்டார்.

இந்த ஆய்வின் போது, "Beyond Development Towards Transformation" என்ற IDB இன் தொலைநோக்கிற்கு அமைவாக, இலங்கையின் தொழில்துறை மாற்ற இலக்குகளை வெற்றிகரமாக அடைவதற்காக நிறுவனத்தின் சேவைகள் மற்றும் வசதிகளை மேலும் நவீனப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அதன்படி, உணவு ஆய்வக சேவைகள், பொறியியல் கருவி மையம் (Engineering Tool Centre), தொழில் Scale-up ஆதரவு, நிதி வசதி ஒருங்கிணைப்பு, சிறந்த தொழில்களுக்கு விருது வழங்கல் மற்றும் தொழிற்பேட்டை சேவைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், IDB இன் அனைத்து பிரிவுகளும் ஒருங்கிணைந்த, திறன் மிக்க மற்றும் புதுமையான அணுகுமுறையுடன் செயல்படுவதற்கும் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

Venue: IDB