கிராமிய பிரதேசங்களில் கைத்தொழில்களை தாபிப்பதில் காணப்படும் பிரதான தடையாகவிருப்பது கைத்தொழில்களை தாபிப்பதற்கு பொருத்தமான இடங்களை தெரிவுசெய்வதற்கு காணப்படும் அசௌகரியமும் கைத்தொழில்களை ஆரம்ப்பிப்பதற்கு அடிப்படைத் தேவையாக அமையும் காணி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக தொடக்கத்தில் பெருந்தொகையான மூலதன செலவினத்தை ஈடுபடுத்துவதற்கு காணப்படும் சிரமமாகும். இவர்களுக்கு வகதிகளை வழங்குவதற்காக கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கீழ் பின்வரும் உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டதாக எற்கனவே நாடு முழுவதும் கைத்தொழில் பேட்டைகள் தாபிக்கப்பட்டுள்ளன.

 

  • அபிவிருத்தி செய்யப்பட்ட காணிகள் மற்றும் ஆயத்த நிலை கட்டிடங்கள்
  • உள்ளக வீதிகள்
  • நீர் களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோக முறைமைகள்
  • உள்ளக மின்சார விநியோக முறைமை
  • தொலைத்தொடர்பு சேவைகள்
  • வடிகாலமைப்பு மற்றும் கைத்தொழில் கழிவுகளை அகற்றுவதற்கான முறைமைகள் ( வடிகான்கள், சாக்கடை ஆளிறங்கு குழிகள், போன்றவை)
  • 24 மணித்தியாலங்களும் செயற்படும் பாதுகாப்பு சேவைகள்

 

தற்போது கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கீழுள்ள கைத்தொழில் பேட்டைகளும் இடங்களும்

Present Position of the Industrial Estate (as at  31 September 2021)
Industrial
Estate
District Total
Units/Plots
No. of
Plots Occupied
No. of
Plots Vacant
No. of Industries
Projects
No. of Industries
Functioning
No. of
Employed
No. of Industries
not Functioning
Ekala Gampaha 92 92 - 60 57 3253 3
Pallekelle Kandy 111 111 - 71 59 2122 12
Panaluwa Colombo 29 29 - 24 21 334 3
Horana Kalutara 66 66 - 14 14 1250 -
Wavulugala Kalutara 14 14 - 13 13 226 -
Pussella Rathnapura 29 29 - 13 10 112 1
Galigamuwa Kegalle 12 12 - 11 7 101  4 
Buttala Monaragala 22 21 1 18 6 78 7
Kotagala Nuwara Eliya 58 56 2 15 8 88 7
Kaludewala Matale 45 43 2 18 14 220 4
Mihintale Anuradhapura 38 32 6 33 3 20 17
Negampaha Anuradhapura 44 26 18 9 - 3 7
Pannala - 1st Stage Kurunegala 34 34 - 18 17 285 1
Pannala - 2nd Satge Kurunegala 8 8 - 3 - - 4
Lunuvila Puttlam 18 18 - 13 12 203 1
Poonthottum Vavuniya 64 58 6 25 18 140 6
Atchchuvely - 1st Stage Jaffna 23 20 3 11 5 139 6
Atchchuvely - 2nd Stage
Jaffna 25 13  12   1     40   3 
TOTAL 732 382 50 374 265 8614 86

 

தொழில்முயற்சியாளர்களை தெரிவுசெய்தல்

தொழில்முயற்சியாளர்கள் கட்டாயமாக இலாபத்தின் மூலம் மாத்திரமே அகத்தூண்டலுக்கு உள்ளாகின்றார்கள் என கருத முடியாதெனினும் அவர்களின் தொழில்முயற்சியின் வெற்றியினை அளவீட்டுக் கொள்ளக்கூடியதொரு ஒரு அளவீடாக இலாபம் கருதப்படுவதால் நேர்முகப் பரீட்சையில் பெற்றுக் கொண்ட புள்ளிகளுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களைப்  பின்பற்றி நேர்முகப் பரீட்சை சபையினால் வழங்கப்படும் விதப்புரையை கருத்தில் கொண்டு கைத்தொழில் பேட்டைப் பிரிவு சாத்தியப்படாடுடைய தொழில்முயற்சியாளர்களுக்கு அபிவிருத்தி செய்யப்பட்ட காணித்துண்டுகளையும் ஆயத்த நிலையிலுள்ள கட்டிடங்களையும் ஒதுக்குகின்றது.

 

  • தொழில்முயற்சிகளுக்கான வாய்ப்புகளை இனங்காணுதல், இணங்காணப்பட்ட வாய்ப்புகளின்அடிப்படையில் தொழில்முயற்சியை ஆரம்பிப்பதற்கும் அத்தொழில்முயற்சியினை வழிப்படுத்துவதற்கும் பேணிவருவதற்கும் கவனம் செலுத்துதல்
  • தொழில்வாய்ப்புகளை வழங்கக்கூடிய சாத்தியப்பாட்டினை உயர்த்துதல்
  • ஏற்றுமதியினை மையமாகக் கொண்ட கைத்தொழிலாக்கம் – வர்த்தகம், பொருளாதாரம், ஏற்றுமதி போன்றவற்றை பின்பற்றியதாக
  • தொழில்முயற்சியின் ஆக்கவிளைவினை உச்சமட்டத்திற்கு உயரத்துவதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்
  • பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளின் மூலம் இலாபத்தையும் மனநிறைவையும் உயர்த்துதல் (சூழல் நேயமிக்க உற்பத்தி போன்ற)

 

ஆயத்தநிலையிலுள்ள கட்டிடங்கள் மற்றும் காணித் துண்டுகளை ஒதுக்குதல்

தங்களது தொழில்முயற்சிகளை தாபிப்பதற்காக தொழில்முயற்சிகளுக்கு ஒதுக்கப்படுகின்ற காணித் துண்டுகள் அல்லது கட்டிடங்களை வழங்குதல் எனும் நிபந்தனையின் கீழ் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் பின்வரும் குத்தகைதாரர்களுடன் குத்தகை ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுகின்றன.

குத்தகை உரிமைகள்

 

  • ஆயத்தநிலை கட்டிடம் – 20 வருடங்கள்
  • காணித் துண்டுகள் – 30 வருடங்கள்
  • அரச தலைமை மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டிற்கு அமைவாக மாதாந்த அல்லது வருடாந்த வாடகையை நிச்சயித்தல்
  • காணியின் அளவு சம்பந்தப்பட்ட கைத்தொழிலின் வகைக்கேற்ப தீர்மானிக்கப்படும்
  • கருத்திட்டத்திற்கு சுற்றாடல் இசைவுச் சான்றிதழை வழங்குதல்

 

விண்ணப்படிவம்

திட்ட முன்மொழிவுக்கான வழிகாட்டுதல்கள்

 

தொடர்புகளுக்கு - பணிப்பாளர் – கைத்தொழில் பேட்டை


: +94 112 632 157
: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நாம் வழங்குவது

Scroll To Top